இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம்
கிருஷ்ணராயபுரம்:கரூர் மாவட்ட பா.ஜ., சார்பில், இலவச கண் மருத்துவ பரிசோ-தனை முகாம் லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில் நடந்தது.மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். மக்களுக்கு இலவச கண் மருத்துவ பரிசோ-தனை முகாம் நடத்தப்பட்டது.இதில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ பரிசோத-னைகளும் பார்க்கப்பட்டது. கரூர் அரசன் கண் மருத்துவமனை மருத்துவ டாக்டர் இளங்கதிர், மக்களுக்கு கண் மருத்துவ சிகிச்சை பரிசோதனை மேற்கொண்டார். லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு, சந்தைப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்டவர்கள் இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர்.