உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேமங்கியில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

சேமங்கியில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கரூர், டிச. 20-கரூர் மாவட்டம், சேமங்கியில் தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், நொய்யல் கால்நடை மருந்தகம் சார்பில், பசு மற்றும் எருமை மாடுகளுக்கான இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) முரளிதரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கரூர் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் உமாசங்கர், விவசாயிகளுக்கு இலவசமாக தாது உப்பு கலவை பாக்கெட்டுகளை வழங்கினார். மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி, விவசாயிகளுக்கு பருவகால மாற்றத்தில் ஏற்படும் கால்நடை நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கையேட்டை வழங்கினார். 450க்கும் மேற்பட்ட கால்நடைகளை முகாமிற்கு விவசாயிகள் அழைத்து வந்து தடுப்பூசி போட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ