தனியார் நிறுவனங்களில் நேர்காணலுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும்
கரூர், கரூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தனியார் வேலைவாய்ப்புகளுக்காக நடத்தப்படும் நேர்காணல்களை எதிர்கொள்ள பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.கரூர், வெண்ணைமலை வேலை வாய்ப்பு அலுவலகத்தில், போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முப்படைகளின் போட்டி தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதோடு, தனியார் வேலைவாய்ப்புகளுக்காக நடத்தப்படும், நேர்காணல்களை எதிர்கொள்ள பயிற்சி வகுப்பு நடக்கிறது. அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறு தேர்வுகள், வாராந்திர தேர்வு, இணையவழித் தேர்வு, முழுமாதிரி தேர்வு, மென்பாட குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு, 04324 -223555 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.