உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இன்று காடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

இன்று காடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

கரூர், கரூர் அருகே, ஜப்பானிய காடை வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் இன்று (14ல்) நடக்கிறது.இதுகுறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கரூர் அருகே, பண்டுதகாரன் புதுாரில் உள்ள, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு ஜப்பானிய வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.அதில், காடை வளர்ப்பு முறைகள், காடை வீட்டமைப்பு, தீவன மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், பல்கலை கழக பேராசிரியர்களால், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் விவசாயிகளுக்கு நடத்தப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 04324-294335 மற்றும் 73390-57073 ஆகிய எண்களில் ஆர்வம் உள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை