உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நண்பரின் சகோதரி காரை திருடியவர் கைது

நண்பரின் சகோதரி காரை திருடியவர் கைது

கரூர்: கரூரில், நண்பரின் சகோதரி காரை திருடிய நண்பர் கைது செய்யப்பட்டார்.திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையை சேர்ந்தவர் வனிதா, 28. இவரது சகோதரர் சதீஸ்குமார். திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த மதியழகன், 32. சதீஸ்குமார், மதியழகன் இருவரும் நண்பர்கள். சதீஸ்குமார் தனது சகோதரி காரை எடுத்து கொண்டு, மதியழகனுடன் கரூர் வந்தார். கடந்த, 17ல் கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் வெளியே வந்து பார்த்தபோது, நண்பர் மதியழகன் மற்றும் ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரையும் காணவில்லை. இது குறித்து கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, மதியழகனை போலீசார் கைது செய்து காரை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை