உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர்-வாங்கல் சாலையில் குப்பையால் கடும் அவதி

கரூர்-வாங்கல் சாலையில் குப்பையால் கடும் அவதி

கரூர்; கரூர்-வாங்கல் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்-டுபுத்துார் பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்-ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நி-லையில், வாங்கல் சாலை அரசு காலனி பகு-தியில், கடந்த சில நாட்களாக, அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது.குறிப்பாக, இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழி-வுகள் அதிகளவில் குவிந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், சாலையில் குவிந்-துள்ள குப்பைகள் காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள், டூவீலர்களில் செல்வோர் தடுமாறு-கின்றனர். குறிப்பாக, வாங்கல் சாலை வாங்கப்-பாளையம் பிரிவில் அதிகளவில் குப்பை தேங்கி-யுள்ளது. இதனால், கரூர்-வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையை உடனடியாக அகற்ற, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை