மேலும் செய்திகள்
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அன்னதானம்
29-Sep-2024
செந்தில் பாலாஜிக்கு ஜாமின்கோவிலில் அன்னதானம் வழங்கல்கரூர், அக். 2-மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததால், கரூர் அருகே நேற்று கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.கரூர் மாவட்ட தி.மு.க., செயலாளரும், மின்சார துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன், 14 ல் சட்ட விரோத பணம் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த, 26 ல் உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுதலை செய்தது. இதனால், கரூர்-சேலம் தேசிய நெடுஞ் சாலையில் மஹா மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு அபிேஷகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. பொதுமக்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ் அன்னதானம் வழங்கினார். மத்திய மாநகர மேற்கு பகுதி தி.மு.க., பொறுப்பாளர் ஜோதிபாசு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
29-Sep-2024