ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
அரவக்குறிச்சி ;மணல்மேடு ஆட்டுச்சந்தையில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்தது.அரவக்குறிச்சி அடுத்த மணல்மேடு பகுதியில் கடந்த புதன்கிழமை ஆட்டுச்சந்தை நடந்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகளை வாங்குவதற்காக கரூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் வருகை புரிந்ததால் ஆட்டுச்சந்தை களை கட்டியது. வெள்ளாடு, செம்மறி ஆடுகள், 2,000 ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. 5,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. 50 லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.