ஐ.டி., ஊழியர் வீட்டில் தங்க நகைகள் திருட்டு
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, ஐ.டி., கம்பெனி ஊழியர் வீட்டில் தங்க நகைகள் திருட்டு போனது.வேலாயுதம்பாளையம், நாணப்பரப்பு பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாஷ், 36; கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம், 26ல், வீட்டை பூட்டி விட்டு, சேலத்துக்கு மனைவி பிரியாவை பார்க்க சென்றுள்ளார். பிறகு, நேற்று முன்தினம் சிவபிரகாஷ், வீட்டுக்கு சென்றுள்ளார்.அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 13 பவுன் தங்க நகைகளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, சிவபிரகாஷ் அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.