உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ஜவஹர் பஜாரில் சரக்கு வாகனங்கள் தீபாவளி வரை தடை விதிக்க எதிர்பார்ப்பு

கரூர் ஜவஹர் பஜாரில் சரக்கு வாகனங்கள் தீபாவளி வரை தடை விதிக்க எதிர்பார்ப்பு

கரூர், கரூர் ஜவஹர் பஜாரில், தீபாவளி முடியும் வரை சரக்கு வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாடு முழுவதும் வரும், 20ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, கரூர் ஜவஹர் பஜார், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பகுதி, கரூர் எம்.எல்.ஏ., அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட தற்காலிக தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஜவஹர் பஜார் பகுதியில் ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளதால், ஆயிரக்கணக்கானோர் புத்தாடை மற்றும் பல்வேறு பொருட்களை வாங்க வருவர். இதனால், ஜவஹர் பஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், லாரி உள்பட சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால், கரூர் ஜவஹர் பஜார் பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சரக்கு வாகனங்கள் வந்து செல்லக்கூடாது என போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். அந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. தீபாவளி பண்டிகை முடியும் வரை, சரக்கு வாகனங்கள் வந்து செல்வதை தடுக்க, டவுன் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி