மேலும் செய்திகள்
கரூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
24-Dec-2024
கரூர்:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் வட்ட கிளை சார்பில், செயலாளர் ஜமுனா ராணி தலைமையில், கரூர் தாலுகா அலுவ-லகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும். முடக்கப்பட்ட அகவி-லைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் ஆகியவற்றை வழங்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி, தணிக்கையாளர் செல்ல முத்து உள்பட பலர் பங்கேற்றனர்.அதே போல், கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராய-புரம், கடவூர், மண்மங்கலம், புகழூர், தோைகமலை, அரவக்குறிச்சி, க.பரமத்தியில், அரசு ஊழியர் சங்க வட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
24-Dec-2024