உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில், கருத்தரங்கம் நடத்தி கொண்டிருந்த அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தி, வெளியேற்றிய காவல் துறையை கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் அன்பழகன் உள்ளிட்ட, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை