அரசு அலுவலர் கழகம் ஆலோசனை கூட்டம்
கரூர்: தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம், கரூர் மாவட்ட கிளை (சி மற்றும் டி பிரிவு) சார்பில், மாவட்ட தலைவர் நீலகண்டன் தலை-மையில், ஆலோசனை கூட்டம் காந்தி கிராமத்தில் நடந்தது.அதில், ஊட்டச்சத்து துறையில் பணியாற்றும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள, பணியிடங்களை நிரப்ப வேண்டும், வருவாய் கிராம ஊழியர்களுக்கு இணையாக, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய பணியாளர்களுக்கு மாதாந்திர சிறப்பு ஓய்-வூதியமாக, 6,750 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் விமலாதித்தன், துணை செயலாளர் யசோதா, நிர்வாகி பிச்சைமுத்து உள்பட பலர் பங்-கேற்றனர்.