மேலும் செய்திகள்
கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் பணி
22-Nov-2024
டூவீலர் மீது டிராக்டர் மோதல் ஆசிரியை - மாணவி பலி
11-Dec-2024
கரூர், டிச. 20-கரூர் அருகே, கார்-டூவீலர் மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் இறந்தார்.கரூர், தெற்கு காந்தி கிராமம் ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் சுரேஷ், 45. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், காருடையாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மனைவி லலிதா, கரூர் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.வழக்கம் போல சுரேஷ், தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். நேற்று காலை, 9:15 மணிக்கு கரூர்-கோவை சாலையில் பவித்ரம் முத்துசோளிபாளையம் அருகே சென்றார். அப்போது கரூர் நோக்கி வந்து கொண்டிருந்த காரும்-டூவீலரும் மோதிய விபத்தில் சுரேஷ் படுகாயமடைந்தார். கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை, பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
22-Nov-2024
11-Dec-2024