உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான நிலையில் சுகாதார வளாகம்

மோசமான நிலையில் சுகாதார வளாகம்

கிருஷ்ணராயபுரம், கோரக்குத்தி கிராமத்தில், மோசமான நிலையில் சுகாதார வளாகம் உள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மணவாசி பஞ்சாயத்து கோரக்குத்தி கிராமத்தில், சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது சுகாதார வளாகம் உள்புற பகுதிகளில், கதவுகள் சிதில மடைந்து மிகவும் மோசமாக இருக்கிறது. மேல்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மற்றும் வெளிபுறத்தில் அதிகமான செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் வளாகம் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, சுகாதார வளாகத்தை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை