உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி அருகே குடிநீர் வீணாவதால் சுகாதார சீர்கேடு

அரவக்குறிச்சி அருகே குடிநீர் வீணாவதால் சுகாதார சீர்கேடு

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே கே.ஆர்.நகர் பகுதியில், குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.பள்ளப்பட்டி அடுத்த கே.ஆர்.நகர் பகுதியில் காவிரி குடிநீர் திட்ட குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீர் வீணாகி ஆறாக ஓடி செல்கிறது. உடைந்த குழாயிலிருந்து வெளிப்படும் குடிநீரை பன்றிகள், நாய்கள் குடிப்பதோடு மட்டுமின்றி, அங்கு தங்கி மேய்ந்து செல்கின்றன. இதனால் தண்ணீர் மிகவும் மாசடைந்து, அதே நீர் பின்னர் குடிநீராக பல்வேறு வீடுகளுக்கும் செல்கிறது. இதனால் அந்த நீரை அருந்தும் மக்களுக்கு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், 'பல மாதங்களாக குழாய் உடைந்து, தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. பன்றிகள், நாய்கள் தண்ணீரில் குளிக்கின்றன. இதே நீர்தான் நாங்கள் குடிக்க வேண்டிய நிலை உள்ளது. எப்போது வேண்டுமானாலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக இப்பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி