இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க ஹிந்து முன்னணி புகார்
கரூர்: ஐயப்பன் சுவாமி குறித்து அவதுாறாக பாடல் பாடிய, இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஹிந்து முன்னணி நிர்வாகிகள், நகர தலைவர் ஜெயம் கணேஷ் தலைமையில், நேற்று கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர்.அதில் கூறியுள்ளதாவது:சென்னையை சேர்ந்த, மேடை பாடகி இசை வாணி, ஹிந்துக்களின் கலியுக தெய்வமான ஐயப்பன் குறித்து, அவதுாறாக மேடையில் பாடியுள்ளார். அந்த பாடல், ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்தில் தேவையற்ற குழப்பத்தை பாடகி இசைவாணி ஏற்படுத்தியுள்ளார். ஹிந்து மதம் மீதான வெறுப்பை ஏற்படுத்திய, பாடகி இசை வாணி மீது, வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.