உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தோட்டக்கலை துறை அறிவிப்பு

தோட்டக்கலை துறை அறிவிப்பு

பயிர் காப்பீடு விவசாயிகளுக்குகுளித்தலை, குளித்தலை அடுத்த கடவூர் வட்டாரத்தில், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம், காப்பீடு செய்து பயன்பெறுமாறு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் அறிவிப்பு செய்துள்ளனர்.தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும்போது, எதிர்பாராத புயல், காற்று, மழை, இடி மற்றும் மின்னல் மூலம் பயிர்கள் சேதமடைகிறது. அத்தகைய காலக்கட்டங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் இதர பாதிப்புகளில் இருந்து வாழ்வாதாரத்தையும், பொருளாதார இலக்கையும் பாதுகாக்க, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலமாக தவிர்க்கலாம்.கடவூர் வட்டாரத்தில், இந்த திட்டத்தின் கீழ் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்களான மரவள்ளி கிழங்கு, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றுக்கு மைலம்பட்டி, பாலவிடுதி குறு வட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும், குத்தகை விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.மேலும் விரிவான விபரங்களுக்கு, தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். பயிர் காப்பீடு செய்யும் வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களுக்கு ஜன.,31க்குள்ளும், மரவள்ளி கிழங்கு பிப்., 28க்குள்ளும், ஆவணங்களுடன் காப்பீடு செய்து பயன் பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ