உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கரூர்: கரூரில், கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.கரூர், மேற்கு மடவளாகம் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன், 32. இவருக்கு, கடன் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்நிலையில் கடந்த பிப்., 26ல் மகனை, தனியார் பள்ளியில் விட சென்ற ஐயப்பன், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் ஐயப்பன் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஐயப்பன் மனைவி கலைச்செல்வி, 25, போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ