லாரி மீது மோதிய விபத்தில் ஏட்டு காலில் எலும்பு முறிவு
லாரி மீது மோதிய விபத்தில்ஏட்டு காலில் எலும்பு முறிவுஅந்தியூர், நவ. 28-பவானி அருகே மொண்டியபாளையத்தை சேர்ந்தவர் அன்பரசு, 43. இவர், பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில், தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியளவில் ஹோண்டா யூனிகான் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இரட்டைக்கரடு, கவின் கேர் பால் பண்ணை எதிரில் சென்றபோது, உத்தரபிரதேச மாநிலம், காசிம்புர் வில்ருக்குன்புர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் சிங், 30, என்பவர் சாலையோரத்தில் லாரியை நிறுத்தியிருந்தார். இதை எதிர்பார்க்காத அன்பரசு, லாரியின் பின்பக்கத்தில் மோதினார்.பலத்த காயமடைந்த அவரை மீட்டு, அந்தியூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சக்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.