அரவக்குறிச்சி ஊராட்சி பள்ளியில் மகிழ் முற்றம் துவக்க விழா
அரவக்குறிச்சி, நவ. 15-அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மகிழ் முற்றம் துவக்க விழாவில் மாணவர்களின் ஆளுமை திறனை மேம்படுத்த, ஐந்து குழுக்கள் பிரிக்கப்பட்டு கொடி அறிமுகம் செய்யப்பட்டது.மாணவர்களின் ஆளுமைத்திறன் மேம்பாட்டு செயல்களை வளர்க்கும் வகையில், ஒவ்வொரு பள்ளியிலும் மகிழ் முற்றம் குழுக்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.இதன்படி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தலைமையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்குரிய கொடிகள் வழங்கப்பட்டு, மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இக்குழுக்களின் மூலமாக மாணவர்கள் அரசியல், அறிவியல் சார்ந்த அனுபவங்கள், ஆளுமைத்திறன், மாதிரி சட்டசபை, மாதிரி பாராளுமன்றம் நடத்தப்பட்டு அதற்குரிய புள்ளிகளைப் பெறுவர்.புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெறும் அணியினுடைய கொடி, பள்ளியில் பறக்க விடப்படும். இந்நிகழ்வில், மாணவர்கள் குழுக்களின் தலைவர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.மகிழ்முற்றம் அமைப்புக்கு பொறுப்பாசிரியராக சகாய வில்சனும், ஐந்து குழுக்களுக்கு பொறுப்பாசிரியர்களாக ஷகிலா பானு, ராபியா பஸ்ரி, ரொகையாபீவி, கவிதா, புவனேஸ்வரி, ஜோதிமணி, சங்கர், ரூபா, நாகராஜன், ஷஃபான் தஸ்லீம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் இந்துமதி உள்ளிட்டோர் வழிகாட்டும் குழுவாக நியமிக்கப்பட்டனர். மேலும் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.