உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கேரள அன்னாசி வரத்து அதிகரிப்பு

கேரள அன்னாசி வரத்து அதிகரிப்பு

ஈரோடு: கேரள மாநிலத்தில் தற்போது அன்னாசி பழ அறுவடை தொடங்கியுள்ளது. இதனால் ஈரோடு மார்க்கெட்டுக்கு அன்னாசி வரத்து அதிகரித்துள்ளது. வ.உ.சி., பூங்கா மார்க்கெட்டில், மாவட்டத்தின் பல்வேறு பகுதி வியாபாரிகள், நேற்று ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.இதுகுறித்து அன்னாசி பழ வியாபாரிகள் கூறியதாவது: மலைப்பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படும் அன்னாசி, கேரளாவில் காட்டுப்பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. கடந்தாண்டு கேரளாவில் நல்ல பருவமழை பெய்ததால், நடப்பாண்டில் விளைச்சல் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சீசன் துவங்கும் மார்க்கெட்டுக்கு வர தொடங்கியுள்ளது. தற்போது அன்னாசி பழம் கிலோ, 45 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ