உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தமிழறிஞர்களுக்கானஉதவித்தொகை உயர்வு;திருக்குறள் பேரவை நன்றி

தமிழறிஞர்களுக்கானஉதவித்தொகை உயர்வு;திருக்குறள் பேரவை நன்றி

கரூர்:வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகையை, தமிழக அரசு அதிகரித்துள்ளதற்கு பாராட்டு என, கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழநியப்பன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வயது அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகையை, 4,000த்திலிருந்து, 7,500 ரூபாயாக உயர்த்தி, சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. தமிழ் போற்றும் அறிஞர்களை, ஆர்வலர்களை போற்றும் வகையில், அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை