மேலும் செய்திகள்
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் திறப்பு இழுபறி
08-May-2025
கரூர் :கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு, அரசு ஆணைப்படி வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது என, மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.கரூர் மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம், மேயர் கவிதா தலைமையில் நேற்று நடந்தது. இதில், கவுன்சிலர்கள் பேசிய விபரம்:ஸ்டீபன்பாபு (காங்.,): கரூர், வெங்கமேடு குளத்துப்பாளையம் மீன் சந்தையில், சாக்கடை வடிகால் வசதி இன்னும் முடிக்கப்படவில்லை. கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மீன் சந்தை கடைகள் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. சாக்கடை வசதி ஏற்படுத்திய பின், கழிவுநீர் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.சுதா (கமிஷனர்): குளத்துபாளையம் மீன் சந்தை கடைகள் டெண்டர் பணிகள் முடிய, இன்னும் இரண்டு மாதங்களாகும். அதற்குள், சாக்கடை வடிகால் பணி முடிக்கப்படும்.ராஜா (மண்டல தலைவர், தி.மு.க.,): கரூர் குளத்துப்பாளையம் மீன் சந்தை கடை உள்பட மாநகராட்சி கடைகளுக்கு கூடுதலாக வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாநகராட்சி பகுதியில், 53 கடைகளை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை.மேயர் கவிதா: மீன் கடைகளில் வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே மீன் விற்பனை நடக்கும். அதற்கு ஏற்ப வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்.சுதா (கமிஷனர்): குளத்துபாளையம் மீன் சந்தையில், 25 கடைகளுக்கு ஏலம் விடப்படுகிறது. அதில், பொதுப்பணிதுறை, தனியார் சந்தை மதிப்பு ஆகியவை கணக்கில் எடுத்து கொண்டு வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது. அரசு ஆணைப்படி வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதில், மாற்றம் செய்ய முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.முன்னதாக, காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கும், கரூர் முன்னாள் நகராட்சி தலைவர் செல்வராஜ் மறைவுக்கும், கவுன்சிலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
08-May-2025