உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நுண்ணீர் பாசன திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

நுண்ணீர் பாசன திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

நுண்ணீர் பாசன திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்புகரூர், அக். 24-நுண்ணீர் பாசன திட்டத்தில் சேர, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு சார்பில், நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு (100 சதவீத மானியத்தில்) ஹெக் டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக, வரியையும் சேர்த்து, 1.35 லட்சம் ரூபாய் வரை வழங்குகிறது. காய்கறி மற்றும் அனைத்து தோட்டக்கலை பயிர்களுக்கும், 5 ஏக்கர் வரை மானியத்தில் நுண்ணீர் பாசன அமைப்புகளை தங்கள் நிலங்களில் அமைத்து கொள்ளலாம். இதர விவசாயிகள், 75 சதவீத மானியத்தில், 12.5 ஏக்கர் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம்.சொட்டு நீர்பாசனம் அமைத்து, ஏழு ஆண்டுகள் நிறைவுற்று இருந்தால், புதிதாக மீண்டும் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொள்ளலாம். மேலும், சேதமடைந்துள்ள உபகரணங்கள் (பக்கவாட்டு குழாய்) மட்டும் மானியத்தில் பெற்று சொட்டு நீர் பாசனம் அமைத்து கொள்ளலாம். தெளிப்பு நீர் பாசனம் அமைத்து மூன்று ஆண்டு நிறைவு பெற்றிருந்தால், சொட்டு நீர் பாசனமாக மாற்றி கொள்ளவும், இணைய வழியில் விண்ணப்பித்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடப்பாண்டில், 1,200 ஹெக்டேர் பரப்பில், 5.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் புகைப்படம், ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல், அடங்கல், கூட்டு வரைபடம், கணினி சிட்டா, மறு ஆய்வு தீர்வு பதிவேடு, நிலவரை படம், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று உள்பட ஆவணங்களுடன், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி அல்லது https://tnhorticulture.tn.gov.in:8080 என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ