மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
குளித்தலை: குளித்தலை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மாற்-றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்-கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். குளித்தலை தாசில்தார் இந்துமதி மற்றும் பலர் பங்கேற்றனர். மருத்துவமனையின் எலும்பு முறிவு மருத்-துவர் திவாகர், மனநல மருத்துவர் பாரதிகார்த்திகா, காது, மூக்கு, தொண்டை நிபுணர் நித்தியா ஆகியோர் கொண்ட மருத்துவ குழு-வினர், மாற்றுத்திறனாளிகளுக்கு சோதனை செய்து உரிய சான்-றிதழ் வழங்கினர். மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய தேசிய அடையாள அட்டையை, எம்.எல்.ஏ., மாணிக்கம் வழங்கினார். அய்யர்மலை, தோகை-மலை, நங்கவரம், காவல்காரன்பட்டி, மருதுார் கிராமங்களில் இருந்து மாற்றுத்திறன் கொண்டவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக செயல்திறன் உதவி-யாளர் ராகவன், பேச்சு பயிற்றுனர் கனகராஜ், ரைட்ஸ் திட்ட அலு-வலர் கீதா மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.