உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆடி மாதம் துவங்கியதால் வெல்லத்துக்கு விலை கூடியது

ஆடி மாதம் துவங்கியதால் வெல்லத்துக்கு விலை கூடியது

கரூர், ஆடி மாதம் தொடங்கியதால், அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் விலை அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.கரூர் மாவட்டத்தில் நொய்யல், சேமங்கி, குளத்துப்பாளையம், கோம்புபாளையம், திருக்காடுதுறை, தவிட்டுபாளையம், தளவாப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கப்படுகிறது.கடந்த வாரம், 30 கிலோ எடை கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,240 ரூபாய், அச்சு வெல்லம், 1,210 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,290 ரூபாய், அச்சு வெல்லம் 1,250 ரூபாய்க்கு விற்றது. விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், ' வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உருண்டை வெல்லம், அச்சு வெல்லத்தை, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். ஆடி மாதம் தொடங்கிய நிலையில், கிராமப்புறங்களில் மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இதனால், வெல்லத்துக்கு தேவை ஏற்பட்டுள்ளதால், விலை சற்று அதிகரித்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !