உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஜாக்டோ-ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ-ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர், கரூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைவருக்கும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் வேலை வழங்கும் உச்சவரம்பை, ஐந்து சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை