உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் 22 முதல் ஜமாபந்தி தொடக்கம்

கரூர் மாவட்டத்தில் 22 முதல் ஜமாபந்தி தொடக்கம்

கரூர், கரூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வரும், 22 முதல் ஜமாபந்தி நடக்கிறது.கரூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வரும், 22 முதல் நடக்கிறது. இதில் மண்மங்கலம், புகழூர், கடவூர் தாலுகாவில், 22, 23, 27ல் நடக்கிறது. கிருஷ்ணராயபுரம், கரூர் தாலுகாவில், 22, 23, 27, 29 ஆகிய நாட்களிலும், குளித்தலை, அரவக்குறிச்சி தாலுகாவில், 22, 23, 27, 29, 30 ஆகிய நாட்களிலும் ஜமாபந்தி நடக்கிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை, சம்பந்தப்பட்ட வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் விண்ணப்பித்து தீர்வு காணலாம். இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி