கரூரில் டிஜிட்டல் பயிர் சர்வே வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
கரூர்:கரூர் வட்டாரத்தில், டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கெடுப்பு பணியை வேளாண் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்கரூர் வட்டாரத்தில், வேளாண்மைத்துறை மூலம், டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம் ஆய்வு மேற்கொண்டார். வேளாண் துறை, தோட்டத்கலைத்துறை அலுவலர்கள், தனியார் வேளாண் கல்லுாரி மாணவியருடன் இணைந்து மொபைல் செயலியில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.அங்கு, விவசாயிகளின் நில உடமை ஆவணங்கள் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. பின், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பின், இடுபொருள்களான சூரிய ஒளி விளக்கு பொறி, தார்பாலின் வழங்கப்பட்டன. ஆய்வின்போது, வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) லீலாவதி, வேளாண்மை உதவி இயக்குனர் காதர் மொஹைதீன் உடனிருந்தனர்.