உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் வரும் 3ல் புத்தக திருவிழா தொடக்கம்

கரூரில் வரும் 3ல் புத்தக திருவிழா தொடக்கம்

கரூரில் வரும் 3ல் புத்தக திருவிழா தொடக்கம்கரூர், அக். 1-கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நுாலக இயக்கம் சார்பில், கரூர் பிரேம் மஹாலி ல் வரும், 3 மாலை, 4:00 மணிக்கு புத்தக திருவிழா தொடங்குகிறது.மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைக்கிறார். கலெக்டர் தங்கவேல், எம்.பி., க்கள் ஜோதிமணி, அருண் நேரு, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, எம்.எல்.ஏ., க்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அதை தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு, தமிழக முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு வாசிக்க, வாசிக்க என்ற தலைப்பில் பேசுகிறார். வரும், 4 ல் முன்னாள் எஸ்.பி., கலியமூர்த்தி, மண்ணில் நல்ல வண்ணம் பெறலாம் என்ற தலைப்பில் பேசுகிறார்.வரும், 5ல் சாலமன் பாப்பையா தலைமை யில், நம் பிள்ளைகளின் வளர்ச்சிக்கும், உயர் வுக்கும், பெரிதும் காரணம் தந்தையே, தாயே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. 6ல் பட்டி மன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கரின், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. 7ல் நன்மை வந்தெய்துக தீதெல்லாம் நலிக என்ற தலைப்பில், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகிறார். 8ல் புலவர் சண்முக வடிவேல், வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தலைப்பிலும், பேராசிரி யர் ஜெகநாதன் 'நூல் பல கல்' என்ற தலைப் பிலும் பேசுகின்றனர்.வரும், 9 ல் கதை கதையாம் காரணமாம் என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா, அன்றாட வாழ்க்கையில் அறம் என்ற தலைப்பில் முனைவர் ஜெயந்தஸ்ரீ பால கிருஷ்ணன் ஆகியோர் பேசுகின்றனர். 10 ல் சாதிக்க ஆசைப்படு என்ற தலைப்பில் முன்னாள் தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு பேசுகிறார். 11 ல் திரைப்பட இயக்குநர் கிருஷ்ணகுமார், பிறந்தும் பிறவாதார் என்ற தலைப்பிலும், கவிஞர் கவிதாசன் முன்னேற்றத்திற்கு மூலதனம் என்ற தலைப்பிலும் பேசுகின்றனர்.வரும், 12 ல் கவிஞர் அறிவுமதி, சங்க தமிழில் இசை செய்திகள் என்ற தலைப்பில் பேசுகிறார். புத்தக திருவிழா நிறைவு நாளான வரும், 13 ல் இலக்கியமே இன்பம் என்ற தலைப்பில் பேராசிரியர் ஞான சம்பந்தம் பேசுகிறார். ஏற்பாடுகளை, கரூர் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை