உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிலையத்தில் ரத்தவகை சோதனையில் குளறுபடி கரூர், டிச. 10-

நிலையத்தில் ரத்தவகை சோதனையில் குளறுபடி கரூர், டிச. 10-

காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ரத்தவகை சோதனையில் குளறுபடிகரூர், டிச. 10-காணியாளம்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரத்த வகை சோதனையில் குளறுபடி நடந்துள்ளது.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே, காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, தினமும் கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடவூர் பண்ணப்பட்டி அருகில் பழனிசெட்டியூரை சேர்ந்த, 35 வயதான ஐந்து மாத கர்ப்பிணி பெண் பரிசோதனை செய்து வருகிறார். இவருக்கு செய்யப்பட்ட ரத்த பரிசோதனையில் குளறுபடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.கர்ப்பிணி பெண்ணுக்கு, காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மே, 5ல், ரத்த வகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அப்போது, 'ஓ' பாசிட்டிவ் ரத்தம் என்று சான்று வழங்கப்பட்டது. அவருக்கு ரத்தம் குறைவாக இருந்ததால், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்பட்டார். அங்கு, அனுமதிக்கப்பட்ட நிலையில், ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாக கூறினர்.இதை சரி செய்ய உடலில் ரத்தம் ஏற்ற வேண்டும் என்றும், எந்த வகை ரத்தம் என்று கேட்டுள்ளனர். அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளித்த சான்றை காட்டியுள்ளார். இருந்தபோதும், மருத்துவமனையில் அவருக்கு ரத்த வகை பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 'ஏபி' பாசிட்டிவ் ரத்த வகை என்று தெரியவந்தது. இதனால், குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.அங்கு மீண்டும் ரத்த பரிசோதனை செய்ததால், அவர் பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்தார். இது குறித்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையிடப்பட்டது. ஏதோ தவறாக நடந்து விட்டது என ரத்த பரிசோதனை மையத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து, கடவூர் வட்டார மருத்துவ அலுவலர் (பொ) தியாகராஜன் கூறுகையில்,'' காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரத்த வகை சோதனையில் கர்ப்பிணி பெண் பரிசோதனையில் நடந்த தவறு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை