உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்க 25வது ஆண்டு விழா

கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்க 25வது ஆண்டு விழா

கரூர்: கரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன், 25 வது ஆண்டு விழா, மாவட்ட தலைவர் ஈஸ்வர மூர்த்தி தலைமையில், கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.அதில், 2019 முதல், 2024 வரை நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற, 24 அணிகளுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சி.இ.ஓ., விஸ்வநாதன், பரிசு கோப்பையை வழங்கி பாராட்டி பேசினார். விழாவில், தமிழக கிரிக்கெட் அசோசியேஷன் துணைத்தலைவர் பாபா, மாவட்ட செயலாளர் சங்கர், சிறப்பு விருந்தினர்கள் நாராயணசாமி, கார்த்திகா, அஜய் கிருஷ்ணா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !