உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

கரூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

கரூர், கரூர், தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், கரூர் எம்.எல்.ஏ.,மான செந்தில்பாலாஜி ஆலோசனை வழங்கினார். கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட், கரூர் காமராஜ் மார்க்கெட், வெங்கமேடு மீன் மார்க்கெட், 18,331 பயனளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதல்வர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்து கொள்வது. கரூர் மாவட்டத்தில், 4 தொகுதிகளில், 179 இடங்களில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடக்கிறது. இதில், பொதுமக்களுக்கு உதவியாக, நமது நிர்வாகிகள் செயல்பட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மாநகர செயலாளர் கனகராஜ், கரூர் மாநகர பகுதி செயலாளர்கள் ராஜா, கணேசன், சுப்பிரமணியன், ஜோதிபாசு, குமார், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கரன், வேலுச்சாமி, முத்துக்குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ