கரூர் லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை ரவுண்டானா பளிச்
கரூர் லைட் ஹவுஸ் கார்னர்காந்தி சிலை ரவுண்டானா 'பளிச்'கரூர், செப். 28-கரூர், லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை ரவுண்டானாவில், முட்புதர்கள் அகற்றப்பட்டது.கரூர், லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானாவில் கடந்த, 2021 பிப்., மாதம் அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., புதிய காந்தி சிலையை திறந்து வைத்தார். மழை காரணமாக ரவுண்டானாவில் அதிகளவில் புற்கள், செடி, கொடிகள் முளைத்திருந்தது. அதை அகற்ற, கரூர் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்தது.இந்நிலையில், ரவுண்டானாவில் உள்ள செடி, கொடிகளை சாப்பிட மாடுகள், கால்நடைகள் அதிகளவில் வந்தது. இதனால், லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, கரூர் லைட் ஹவுஸ் கார்னர் ரவுண்டானாவில் உள்ள முட்புதர்களை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். வரும் அக்., 2ல் தேசப்பிதா காந்தியடிகளின் பிறந்த நாள் கொண்டாட உள்ள நிலையில், லைட் ஹவுஸ் கார்னர், பளிச் என உள்ளதால், கரூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.