கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா : காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்
கரூர்: கரூர் மாரியம்மன் கோவிலில், நேர்த்திக்கடன் செலுத்த உள்ள பக்-தர்கள், நேற்று காப்பு கட்டி கொண்டனர். மேலும், புதுமண தம்ப-தியர் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டனர்.கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், வைகாசி திரு-விழா கடந்த, 11ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, கடந்த, 16ல் பூச்சொரிதல் விழா நடந்தது.திருவிழாவையொட்டி, நேற்று காலை, நேர்த்திக்கடன் செலுத்த உள்ள பக்தர்கள், சுவாமியை வழிபட்டு, நீண்ட வரிசையில் நின்று கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றினர். பின், காப்பு கட்டி விர-தத்தை தொடங்கினர். மேலும், நேற்று புதுமண தம்பதியர் ஏராளமானோர், கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி சுவாமியை வழிபட்டனர்.வரும், 26ல் தேரோட்டம், 25 முதல், 27 வரை மாவிளக்கு ஊர்-வலம், பால்குட ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 28ல் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், வரும் ஜூன், 5ல் பஞ்ச பிரகாரம், 6ல் புஷ்ப பல்லக்கு, 7ல் ஊஞ்சல் உற்சவம், 8ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.