| ADDED : ஆக 29, 2011 11:57 PM
கரூர்: கரூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 35 மாணவ, மாணவியர் உள்பட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா தலைமையில் நடந்தது. அதில் மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் 35 மாணவ, மாணவிகளுக்கு 45 ஆயிரம் ரூபாய் மதிப்புலான கல்வி உதவி தொகையும், காதொலி கருவி மற்றும் ஊன்றுகோலும், பிற்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டிகளையும் மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா வழங்கினார்.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற கரூர் வித்யா பவன் மேல்நிலை பள்ளி மாணவி சக்தி என்பவருக்கு, மத்திய அரசு சார்பில் 50 ஆயிரம் ரூபாய்க்கான செக் மற்றும் அம்பேக்தார் விருதையும் மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா வழங்கினார். டி.ஆர்.ஓ., கிறிஸ்துராஜ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஆதி நாராயணன், திட்ட அலுவலர் முருகன், செய்தி தொடர்பு அலுவலர் மாறன் உள்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.