கரூர் பாட்டி சித்தர் சுவாமி குரு பூஜை
கரூர், கரூர் பாட்டி சித்தர் சுவாமிகளின், 10ம் ஆண்டு குரு பூஜை விழா, தான்தோன்றிமலையில் நடந்தது.அதையொட்டி நேற்று காலை, 8:15 மணிக்கு சுவாமிகளின் ஜீவசமாதியில், கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின்னர் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஓம்சக்திசேகர், தர்மலிங்கம், முத்துக் குமார், ரவிக்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.