கேதார கவுரி நோன்பு விழா
கரூர், கரூர் ஜவஹர் பஜார் வாசவி மஹாலில், தீபாவளி கேதார கவுரி நோன்பு விழா நடந்தது.நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள், கேதார கவுரி நோன்பு அனுசரிப்பது வழக்கம். நடப்பாண்டு நேற்று கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள வாசவி மஹாலில் கேதார கவுரி நோன்பு அனுசரிக்கப்பட்டது. நோன்பு கலசம் வைக்கப்பட்டு, இறை வழிபாடு நடத்தப்பட்டது.