உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கள்ளப்பள்ளியில் கும்பாபிேஷக விழா

கள்ளப்பள்ளியில் கும்பாபிேஷக விழா

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளியில் உள்ள வலம்புரி விநாயகர், யோக ஆஞ்சநேயர், பெரியகாண்டியம்மன், காலபைரவர், கருப்பண்ணன்சுவாமி, மகாமுனி, நாகராஜசுவாமிகளுக்கு நேற்று கும்பாபிேஷக விழா நடந்தது. கடந்த 5ல் விக்னேஷ்வர பூஜை, முதல் கால யாக பூஜை நடந்தது.நேற்று காலை 10:00 மணிக்கு வேத பாராயணம், திருமுறை பாராயணம், மூல மந்திரம் ஹோமங்கள் முழங்க நான்காம் கால யாக வேள்வி பூஜை செய்யப்பட்டு, கோவில் கோபுர கலசங்களுக்கு கும்பாபி ேஷகம் நடந்தது. கள்ளப்பள்ளி, லாலாப்பேட்டை பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !