உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

பாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

கிருஷ்ணராயபுரம், வயலுார் பஞ்சாயத்து, கோடங்கிப்பட்டி கிராமத்தில் பாப்பாத்தி அம்மன், வடுவாச்சியம்மன், மதுரை வீரன் சுவாமிகளுக்கு கும்பாபி ேஷக விழா நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்சாயத்து கோடங்கிப்பட்டி கிராமத்தில் பாப்பாத்தி அம்மன், வடுவாச்சியம்மன், மதுரை வீரன் சுவாமிகளுக்கு கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் கும்பாபி ேஷகத்தை முன்னிட்டு கடந்த, 5ல் காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு விநாயகர் பூஜை செய்து, ேஹாமம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை செய்த பின், கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ