சுமை துாக்கும் தொழிலாளர் சங்கம் தர்ணா போராட்டம்
கரூர்:தமிழ்நாடு சுமை துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், கரூர் நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன், தர்ணா போராட்டம் நடந்தது.அதில், சங்க அங்கீகார தேர்தலை நடத்த வேண்டும், நிலுவையில் உள்ள கூலி உயர்வை வழங்க வேண்டும், வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்க வேண்டும், ஆதார் இணைப்பில் ஏற்பட்ட தவறுகளை நிர்வாகமே சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ராஜா மற்றும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.