உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விளக்குகள் பராமரிப்பு பணி

விளக்குகள் பராமரிப்பு பணி

கிருஷ்ணராயபுரம்: கிருஷணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வரகூர், வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி பகுதிகளில் தெரு விளக்-குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக வரகூர், மேட்டுப்பட்டி பகுதிகளில் சாலையோர தெரு விளக்குகளில் பழுது ஏற்பட்டதால், எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பழுது எற்பட்ட தெரு விளக்குகளை, பராமரிப்பு செய்து விளக்குகள் எரிய வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ