உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின்னல் வேகத்தில் செல்லும் டூவீலர்கள்

மின்னல் வேகத்தில் செல்லும் டூவீலர்கள்

கரூர்:கரூர், தான்தோன்றிமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த இருபுறமும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இருந்தும் சிலர், டூவீலர்களில் மாணவ, மாணவியரை பீதிக்குள்ளாக்கும் வகையில் அதிக வேகத்தில் சென்று வருகின்றனர்.மேலும், கல்லுாரிக்கு செல்வதற்கும், கல்லுாரி முடிந்து பஸ்சில் ஏறுவதற்கும், மாணவ, மாணவியர் சாலையை கடந்து செல்ல முடியாதபடி, டூவீலரை தாறுமாறாக ஓட்டி செல்கின்றனர். இதை போக்குவரத்து போலீசார் கண்காணித்து, அதிவேகமாக செல்லும் டூவீலர் ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ