உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தண்ணீர் நிரம்பியதால் கடல் போல்

தண்ணீர் நிரம்பியதால் கடல் போல்

காட்சியளிக்கும் பெ.ஆ., தடுப்பணைகரூர், நவ. 20-கரூர் அருகே, மழை காரணமாக தண்ணீர் நிரம்பியதால், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை கடல் போல காட்சியளிக்கிறது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கரூர் மாவட்ட அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை வட்டார பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 446 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால், ஆற்றுப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து, 865 கன அடியாக அதிகரித்தது. தடுப்பணை நிரம்பியுள்ளதால், கடல் போல காட்சியளிக்கிறது.அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து, 864 கன அடியாக இருந்தது. 90 அடி உயரம் கொண்ட, அணை நீர்மட்டம், 87.41 கன அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து, புதிய பாசன வாய்க்காலில், 292 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.மாயனுார் கதவணைகரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 5,729 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 4,509 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு, 1,220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. ஆத்துப்பாளையம் அணை க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 52 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து, நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 65 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 26.90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 26.83 அடியாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ