வாழ்வாதார தொழில்நுட்பங்கள் தொடக்க விழா
குளித்தலை:குளித்தல அடுத்த சேவாப்பூரில், 'அன்னை லியா புரோவோ' உருவாக்கிய ஐ.எஸ்.எஸ்., மற்றும் கடவுர் இயற்கை விவசாய கூட்டமைப்பு சார்பாக வாழ்வாதார தொழில்நுட்பங்கள் தொடக்க விழா, ஐ.எஸ்.எஸ்., செயலாளர் பெருமாள் தலைமையில் நடந்தது. திருச்சி ஸ்கோப் நிறுவனர் சுப்புராமன், சி.இ.ஓ., ஜெயராமன், ஐ.எஸ்.எஸ்., நிர்வாகக்குழு உறுப்பினர் மார்கண்டன், வானகம் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்திய அரசின் முன்னாள் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், வாழ்வாதார தொழில்நுட்பங்களை தொடங்கி வைத்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த புதிய வாழ்வாதார தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அளிப்பதன் மூலம் சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், அறிவியல் மற்றும் புதுமையான வாழ்வாதார தொழில்நுட்பங்களை முன்னெடுத்தல், நிலையான தேன் உற்பத்தி மற்றும் பயனாக்கத்தை ஊக்குவித்தல், இயற்கை வளங்களை பாதுகாத்து நிலையான வேளாண்மையை வளர்த்தல், விவசாயிகள் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்குதல் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை விவசாயிகள் பெறுகின்றனர்.இந்நிகழ்ச்சியில், நான்கு கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகள் மற்றும் கடவூர் இயற்கை விவசாய கூட்டமைப்பு விவசாயிகள் உள்பட, ஐ.எஸ்.எஸ்., பணியாளர்கள் கலந்துகொண்டனர்.