சாலையில் கால்நடைகள் போக்குவரத்து பாதிப்பு
அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் சாலையில், கால்நடைகள் திரிவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூரிலிருந்து தாராபுரம் செல்லும் போது, சின்னதாராபுரத்தை கடந்து செல்ல வேண்டும். இதே போல அரவக்குறிச்சியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு செல்லும் போது, சின்னதாராபுரத்தை கடந்து செல்ல வேண்டும். முக்கிய சாலையாக உள்ள சின்னதாராபுரத்தில், கால்நடைகளை சாலை நடுவில் திரிய விடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சில சமயங்களில் விபத்தும் ஏற்படுகிறது, சின்னதாராபுரம் ஊராட்சி அலுவலகத்தில், பலமுறை மனுக்கள் அளித்தும் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.