உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆன்லைனில் மட்டும் எம்.-சாண்ட் நடைசீட்டு; கலெக்டர் அறிவிப்பு

ஆன்லைனில் மட்டும் எம்.-சாண்ட் நடைசீட்டு; கலெக்டர் அறிவிப்பு

கரூர், எம்.-சாண்ட் உள்பட கனிமங்களை எடுத்து செல்ல, நடைசீட்டினை இணையதள வாயிலாக பெற வேண்டும்.கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கனிம குத்தகை உரிமங்கள் வழங்கப்பட்டு குவாரி இயங்கி வருகிறது. குவாரிகளில் இருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை, வெளியே எடுத்து செல்ல ஏதுவாக குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும் இசைவாணை சீட்டு வழங்குவது பிப்.,25 முதல் நடைமுறையில் உள்ளது.கரூர் கலெக்டர் மூலம் அனுமதி பெற்றுள்ள, கனிம இருப்பு கிடங்கில் இருந்து இருப்பு வைத்துள்ள கனிமங்களான எம்.-சாண்ட், ஜல்லி, டஸ்ட், பி.சாண்ட் உள்பட இதர கனிமங்களை வெளியே எடுத்து செல்லும் வாகனங்களுக்கு வழங்கப்படும் நடை சீட்டினை, இணையதள வாயிலாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் பதிவு செய்த கனிம இருப்பு கிடங்கு உரிமையாளர்கள், mimas.tn.gov.inஇணையதளம் வழியாக மட்டுமே நடை சீட்டினை பெற்றுக் கொள்ள இயலும்.இந்த அனுமதி சீட்டினை வாகன டிரைவர்கள், கட்டாயம் வாகன தணிக்கையின் போது வைத்திருக்க வேண்டும்.உரிய அனுமதியில்லாமல் கனிமங்கள் எடுத்து செல்வது கண்டறியப்பட்டால், அரசு விதிகளின்படி உரிய கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி