மேலும் செய்திகள்
சேலம் வழியே வாரணாசிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
02-Jan-2025
சேலம்: உத்தர பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா வரும், 13 முதல், பிப்., 26 வரை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மங்களூரு சென்ட்ரல் - பனாரஸ் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: மங்களூரு சென்ட்ரல் - பனாரஸ் ரயில் வரும், 18, பிப்., 15 காலை, 4:15க்கு புறப்பட்டு, திங்கள் மதியம், 2:50 மணிக்கு பனாரஸை அடையும். இந்த ரயில் காசர்கோடு, கோழிக்கோடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே செல்லும். மறு-மார்க்க ரயில் வரும், 21, பிப்., 18 மாலை, 6:20க்கு கிளம்பி வெள்ளி அதிகாலை, 2:30க்கு மங்களூருவை அடையும்.
02-Jan-2025