காரில் குட்கா பொருட்கள் கொண்டு சென்றவர் கைது
காரில் குட்கா பொருட்கள்கொண்டு சென்றவர் கைதுகரூர், டிச. 10-கரூர் அருகே, காரில் புகையிலை குட்கா பொருட்களை கொண்டு சென்ற ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் இரவு, ஈரோடு சாலை வடிவேல் நகர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ேஹாண்டா அமேஜ் காரை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 75 ஆயிரத்து, 801 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு, 39 ஆயிரத்து, 870 ரூபாய்.இதையடுத்து, காரை ஓட்டி வந்த கரூர் தான்தோன்றிமலையை சேர்ந்த முருகன், 47, என்பவரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.